- டோஃபு பன்னீரை சதுர வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- பிரட் தூளில் பிரட்டி வைத்திருந்த டோஃபு பன்னீரை போட்டு நன்கு பொன்னிறம் வரும் வரை பொறித்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள்:
டோஃபு பன்னீர் - 400 கிராம்
கார்ன்ஃப்ளார் - தேவைக்கேற்ப
மைதா மாவு - தேவைக்கேற்ப
பிரட்தூள்கள் - தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - வறுக்க
மிளகுத்தூள் - சுவைக்கு ஏற்ப
உப்பு - ருசிக்கேற்ப
செய்முறை:
• டோஃபு பன்னீரை சதுர வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு கண்ணாடி பவுளில் வெட்டி வைத்துள்ள டோஃபு பன்னீர், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
• பின்னர் இந்த பன்னீர் கலவையை ஒரு 15 நிமிடம் ஊறவிடவும்.
• ஒரு தட்டில் மைதா மாவு, மற்றொரு தட்டில் பிரட் தூள்கள், ஒரு பவுளில் கார்ன்ஃப்ளார் மாவுவை கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளுங்கள்
• டோஃபு பன்னீர் 15 நிமிடங்கள் ஊறிய பின்னர் முதலில் மைதா மாவில் டிப் செய்து பின்னர் கார்ன்ஃப்ளார் மாவில் டிப் செய்து எடுத்து கொள்ளவும்.
• கார்ன்ஃப்ளார் மாவில் டிப் செய்த டோஃபு பன்னீரை பிரட் தூளில் நன்கு அனைத்து பக்கங்களில் பிரட்டி எடுக்கவும்.
• ஒரு வாணலில் தேவையான எண்ணெய் ஊறி பிரட் தூளில் பிரட்டி வைத்திருந்த டோஃபு பன்னீரை போட்டு நன்கு பொன்னிறம் வரும் வரை பொறித்து எடுக்கவும்.
• டோஃபு பன்னீர் நகட்ஸ் ரெடி.
• இதனுடன் டெமேட்டோ சாஸ் வைத்து சாப்பிட கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விருப்பி சாப்பிடுவார்கள்.