குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை துவையல்
- மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும்.
- இந்த இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வல்லாரைக்கீரை - ஒரு கப்,
பூண்டு - 2 பல்,
தேங்காய் துருவல் - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 5,
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவைத்து ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
இப்போது சத்தான சுவையான வல்லாரை துவையல் ரெடி.
குறிப்பு: ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிட்டும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health