சத்தான டிபன் வரகு அரிசி கொள்ளு பொங்கல்
- வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
- கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்தது.
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி - 200 கிராம்
கொள்ளு - 50 கிராம்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 15
நெய் - 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
சத்தான சுவையான வரகு அரிசி கொள்ளு பொங்கல் ரெடி.
குறிப்பு: விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானியங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health