வாழைக்காயில் சூப்பரான சிப்ஸ் செய்யலாம் வாங்க...
- வாழைக்காயில் பல ரெசிபிகளை செய்யலாம்.
- வாழைக்காய் சிப்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள்/மிளகாய் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
ஒரு கிண்ணத்தில் மிளகுத் தூள்/மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
வாழைக்காயை நீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு பௌலில் போட்டு, அதில் கலந்து வைத்த மிளகாய் தூளை சேர்த்து நன்றாக குலுக்கி எடுத்தால் வாழைக்காய் சிப்ஸ் ரெடி.
இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health