சமையல்

10 நிமிடத்தில் செய்யலாம் சைவ ஆம்லெட்

Published On 2023-04-28 09:21 GMT   |   Update On 2023-04-28 09:21 GMT
  • டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது.
  • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு - தலா 50 கிராம்

உளுந்து, முந்திரி, மக்காச்சோளம் - 50 கிராம்

முழு கோதுமை - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, கொரகொரப்பாக அரைக்கவும்.

அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நன்றாகக் கரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை கரைத்த மாவுடன் கலந்து ஆம்லெட் போல் தோசைக்கல்லில் ஊற்றி, வேக வைத்து எடுத்தால் சுவையான 'சைவ ஆம்லெட்' தயார்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News