வீட்டிலேயே செய்யலாம் வெஜிடபிள் சீக் கபாப்
- சிக்கன், மட்டனில் கபாப் செய்து இருப்பீங்க.
- இன்று காய்கறியில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - அரை கிலோ
பச்சை பட்டாணி - 50 கிராம்
கேரட் - 1,
பீன்ஸ் - 10,
காலிஃப்ளவர் - கொஞ்சம்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, வெண்ணெய் - தேவைக்கு
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
கேரட், பீன்ஸ், காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் போட்டு வதக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் ஆறவைத்து அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இத்துடன் மிளகாய் தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு கலந்து மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கிரில் கம்பியில் வெண்ணெய் தடவி கொலுக்கட்டை போல் மாவை கம்பியில் பிடித்து வைக்கவும். இதனை பார்பிக்யூ சார்க்கோல் கிரில் அடுப்பில் வைத்து 20 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
அவ்வப்போது உணவுகள் மீது வெண்ணெய் தடவி விட்டால் சட்டென கருகாது. வெந்ததும் மெதுவாக கம்பியில் இருந்து உருவி, சாஸ், உடன் பரிமாறவும். பார்பிக்பூ அடுப்பு இல்லாதவர்கள் தோசைக்கல்லில் போட்டும் எடுக்கலாம்.
இப்போது சூப்பரான வெஜிடபிள் சீக் கபாப் ரெடி.
இதில் எந்த காய்கறிகளை வேண்டுமானலும் சேர்த்து செய்யலாம்.