குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடும் காய்கறி தோசை... செய்யலாம் வாங்க...
- குழந்தைகள் இந்த தோசையை விரும்பி சாப்பிடும்.
- காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 4
கேரட் - 1
பீன்ஸ் - 10
கோஸ் - சிறிதளவு
ஸ்வீட் கார்ன் - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - அரை கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* வரமிளகாய கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.
* ப.மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ப.மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயம், துருவிய கேரட், வேக வைத்த ஸ்வீட் கார்ன், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* பின்பு மிளகுத்தூள், கொரகொரப்பாக அரைத்த வரமிளகாய், தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளுங்கள்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை எடுத்து தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* அவ்வளவுதான் இப்போது மொறுமொறுப்பான காய்கறி தோசை தயார்.