சமையல்

சத்தான ஸ்நாக்ஸ் கீரை வெஜிடபிள் சமோசா

Published On 2023-07-16 09:39 GMT   |   Update On 2023-07-16 09:39 GMT
  • இந்த ஸ்நாக்ஸ் சத்தானது சுவையானது.
  • இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 200 கிராம்,

ஏதாவது ஒரு கீரை - ஒரு கைப்பிடி அளவு,

வெங்காயம் - 2,

ப.மிளகாய் - 3

கோஸ் துருவல் - 4 டீஸ்பூன்,

கேரட் துருவல் - 2 டீஸ்பூன்,

உருளைக்கிழங்கு - 2,

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,

கரம் மசாலாத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும்.

ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், கீரை, கோஸ் துருவல், கேரட் துருவல் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

வதக்கிய கீரை மற்றும் காய்களுடன், மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

மைதா மாவை, சின்ன உருண்டைகளாக உருட்டி, சிறிய வடிவில் இட்டு உள்ளே கீரை - வெஜிடபிள் உருண்டைகளை வைத்து சமோசா வடிவில் மூடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

இப்போது சூப்பரான கீரை வெஜிடபிள் சமோசா ரெடி.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News