சமையல்

ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் நக்கெட்ஸ்

Published On 2023-05-30 09:31 GMT   |   Update On 2023-05-30 09:31 GMT
  • ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
  • குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

காய்கறி மசாலா செய்ய

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கேரட் - 1

பீன்ஸ் - 10

பட்டாணி - 1/2 கப்

உருளைக்கிழங்கு - 4

பன்னீர் - 100 கிராம்

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

ஆம்சூர் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை நறுக்கியது

எண்ணெய் - தேவையான அளவு

சோள மாவு கலவை செய்ய

சோள மாவு - 1 மேசைக்கரண்டி

மைதா - 2 மேசைக்கரண்டி

உப்பு - 1/4 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

தண்ணீர்

கார்ன் பிளேக்ஸ்

செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* பன்னீரை துருவிக்கொள்ளவும்.

* பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் பாதி வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.

* காய்கறிகள் வெந்த பிறகு வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

* பின்பு காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள்,கரம் மசாலா தூள், உப்பு, ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

* பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விட்டு, மசித்து கொள்ளவும்.

* அடுத்து அடுப்பை அணைத்து விட்டு துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.

* ஒரு தட்டில் எண்ணெய் தடவி, மசாலாவை பரப்பி ஆறவிட்டு, 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.

* கார்ன் பிளேக்ஸை பொடியாக்கி கொள்ளவும்.

* சோள மாவு கலவை செய்ய, சோள மாவு, மைதா, உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கட்டியின்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்..

* பிரிட்ஜில் வைத்த மசாலாவை எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டவும்.

* பின்பு அதை சோள மாவு கலவையில் முக்கி கார்ன் பிளக்ஸில் பிரட்டி எடுத்து 5 நிமிடம் பிரீஸரில் வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த நக்கெட்ஸை சூடான எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

* இப்போது சூப்பரான வெஜிடபிள் நக்கெட்ஸ் ரெடி.

* கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News