- காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதை செய்து கொடுக்கலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்
பெரிய வெங்காயம்- 1
தக்காளி - 1
கேரட்- 1
பச்சைப்பட்டாணி- கால் கப்
உருளைக்கிழங்கு - 1
முட்டைக்கோஸ்- துருவியது கால் கப்
இஞ்சி- சிறிய துண்டு
பச்சை மிளகாய்- 2
மிளகாய் வற்றல்- 2
உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் - தேவையான அளவு
கொத்தமல்லி- அலங்கரிக்க
தாளிக்க:
நெய் அல்லது எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை:
* தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, காய்கறிகள், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெறும் கடாயில் ரவையை போட்டு சிவக்க வறுக்கவும்.
* பச்சை பட்டாணியை வேக வைத் கொள்ளவும்.
* 1 கப் ரவைக்கு 1 1/2 கப் தண்ணீரை வேக வைக்க வேண்டும், அதற்கு 1 1/2 கப் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* வாணலியில் எண்ணெயிட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, ப.மிளகாய், காய்ந்த மிளகாய், வெங்காயத்தை வதக்க வேண்டும்.
* பிறகு காய்கறிகளைச் சேர்த்து வதக்கின பிறகு கடைசியாகத் தக்காளியைச் சேர்க்க வேண்டும். தக்காளி சீக்கிரம் வதங்கி விடும் என்பதால் இறுதியில் சேர்த்தால் போதும்.
* அடுத்து அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி வேக விடவும்.
* அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.
* காய் வெந்தவுடன் வறுத்த ரவையைக் கொதிக்கும் கலவையுடன் கொட்டிக் கொண்டே கிளற வேண்டும்(இல்லையென்றால் அடி பிடித்து விடும்).
* ரவை வெந்து எண்ணெயிடும் போது ஒட்டாமல் வரும், அப்போது கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
* இப்போது சூப்பரான காய்கறி ரவா உப்புமா ரெடி.
* பத்து நிமிடங்களில் தயார் செய்து விடக் கூடிய எளிய சுவை மிகுந்த சிற்றுண்டி வகை இது.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health