சமையல்

கோதுமை மாவு வெஜிடபிள் தோசை

Published On 2023-06-26 06:01 GMT   |   Update On 2023-06-26 06:01 GMT
  • டயட்டில் இருப்பவர்களுக்கு சத்தான டிபன் இது.
  • குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்

வெங்காயம்- 1,

பீன்ஸ் - 10,

கோஸ் - 50 கிராம்

கேரட் - 1,

கொத்தமல்லி - சிறிதளவு,

ப.மிளகாய் - 2,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், பீன்ஸ், கோஸ், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பீன்ஸ், கோஸ், உப்பு சேர்த்து வேக விடவும்.

காய்கள் முக்கால் பாகம் வெந்ததும் அதை கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, அதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

சத்தான வெஜிடபிள் தோசை ரெடி.

இதற்கு தொட்டுக்கொள்ள ஏதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். விருப்பமான காய்கறிகள் எதை வேண்டுமானலும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News