சுவையான கார்லிக் குல்ச்சா ஈஸியா செய்யலாம் வாங்க
- வீட்டில் அலுத்து போன சமையலுக்கு டா டா சொல்லுங்க.
- குடும்பத்தினருக்கும் ரொம்பவே பிடிக்கும்.
வீட்டில் அலுத்து போன சமையலுக்கு டா டா சொல்லுங்க. சப்பாத்தி செய்ற நேரத்தை விட கம்மியான நேரத்தில் சூப்பரான கார்லிக் பட்டர் குல்ச்சா செய்யலாம். கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும். உங்கள் குடும்பத்தினருக்கும் ரொம்பவே பிடிக்கும். இதற்காக தனியாக பொருட்கள் எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் தினசரி சமையல் பொருட்களே போதும் எளிதாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
ஓமம்- ஒரு சிட்டிகை
ஆரிகேனோ- ஒரு சிட்டிகை
பூண்டு- துருவியது 3 பல்
பால் - 1/2 கப்
சர்க்கரை - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
வெண்ணெய் - தேவைக்கேற்ப.
கொத்தமல்லி தழை
செய்முறை:
முதலில் குல்ச்சாவுக்கு மாவு தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் துருவிய பூண்டு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழைகள், ஒரு சிட்டிகை ஓமம், ஆரிகேனோ, பால், சர்க்கரை, உப்பு ஒரு சிட்டிகை மற்றும் எண்ணெய், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை 30 நிமிடம் காத்து புகாத அளவிற்கு துணிபோட்டு மூடி வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து மாவு நன்றாக ஊறியதும் அதனை உங்களுக்கு ஏற்ற அளவுக்கு எடுத்து உருட்டி, சப்பாத்தி போல தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடேற்றி குல்ச்சாவை போடவும். அதன் மீது வெண்ணெய் தடவி திருப்பி போடவும். இதேபோன்று அனைத்தையும் போட்டு எடுக்க வேண்டும். சூடான கிரேவியை சேர்த்து சாப்பிடும் போது சூப்பரா இருக்கும். இவ்ளோ தான் சிம்பிளான பட்டர் குல்ச்சா தயார். குடும்பத்திற்கு செய்து கொடுத்து சாப்பிட்டு மகிழுங்கள்.