பெண்கள் உலகம்

தைராய்டு பாதிப்பு இருந்தால் பெண்கள் கருத்தரிக்க முடியுமா?

Published On 2024-10-23 09:17 GMT   |   Update On 2024-10-23 09:17 GMT
  • பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம்.
  • தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டை மிகப்பெரிய பிரச்சனை என்று நினைத்து கவலைப்படுகிறார்கள்.


தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

குழந்தையின்மையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும் நிலையில், அதை முழுமையாக கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். அதனால் பின் விளைவுகள் எதுவும் ஏற்படாது.

அதே நேரத்தில் தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கான அடிப்படையான பல விஷயங்களை கவனிக்கிறது.

குறிப்பாக, குழந்தை பேறு என்று எடுத்துக் கொண்டால் கருமுட்டைகள், விந்தணுக்கள், கர்ப்பப்பை ஆகிய அனைத்தும் சீராக செயல்பட வேண்டும்.


ஒரு பெண் கர்ப்பம் தரிக்கின்ற போது உருவாகிற நஞ்சு, குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் ஆகிய அனைத்துமே சீராக இருக்க வேண்டும்.

ஆனால் தைராய்டு பிரச்சனை இருந்தால் கர்ப்பம் மட்டுமல்ல, ஆரோக்கியமாக குழந்தை பேறு பெறுவது வரைக்கும் அந்த பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம்.

எனவே கர்ப்ப காலகட்டத்தில் கண்டிப்பாக தைராய்டு என்பது ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

இந்த தைராய்டு குறைவதால் பல நேரங்களில் குழந்தையின்மை பிரச்சனையும் ஏற்படலாம். மேலும் தைராய்டு பாதிப்பால் குழந்தை பேறு ஏற்படும் போது கருச்சிதைவு, குறை பிரசவம், குறைபாடுள்ள குழந்தை பிறக்கலாம்.


கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளான ரத்த சர்க்கரை அளவு குறைதல், வயிற்றில் குழந்தை இறப்பு, குழந்தையின் வளர்ச்சி குறைபாடுகள், பெண்களுக்கு உடல் எடை கூடுவதால் பிரச்சனை, ரத்த அழுத்தம், உப்பு சத்து ஆகிய அனைத்துமே தைராய்டு பிரச்சனை இருக்கிற பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Tags:    

Similar News