செய்திகள் (Tamil News)

விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறியது வருத்தமளிக்கிறது: சசிகலா

Published On 2017-02-08 15:38 GMT   |   Update On 2017-02-08 15:38 GMT
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட சிகிச்சை முறைகள் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என பன்னீர் செல்வம் கூறியது வருத்தமளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை:

அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இன்று அவர் பேட்டி  அளித்து இருந்தார்.

அந்த பேட்டியில் , ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட சிகிச்சை முறைகள் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என பன்னீர் செல்வம் கூறியது வருத்தமளிப்பதாக சசிகலா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

அம்மாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஒரு திறந்த புத்தகம், ஒளிவு மறைவு எதுவுமில்லை. எங்களுக்கு மனதில் பயம் இல்லை.  அரசியலில் பன்னீர் செல்வம் விலை போய்விட்டார் என்பதை நினைத்து வருத்தப்பட்டேன்.

திமுக பரப்பும் செய்திகளை குறித்து கூட எனக்கு கவலை இல்லை. இவ்வளவு நாட்கள் எங்களுடன் இருந்த பன்னீர் செல்வம் அம்மா மறைவு குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறியதை நினைத்து வருந்துகிறேன்.

சொத்துகுவிப்பு வழக்கில் எங்களுக்கு பயமில்லை. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News