செய்திகள் (Tamil News)

எங்கள் கோரிக்கைக்கு ஒத்துழைத்தால் இரு அணிகள் இணைவதில் நிபந்தனை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

Published On 2017-06-01 04:10 GMT   |   Update On 2017-06-01 04:10 GMT
எங்கள் கோரிக்கைக்கு ஒத்துழைத்தால் இரு அணிகள் இணைவதில் நிபந்தனை இல்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கம்பம்:

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கம்பம் நகரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 45 ஆண்டுகளாக அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாகத்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நடத்தி பாதுகாத்து வந்தனர். எந்த ஒரு தனி குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் கட்சி இருக்க கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

அதேவழியை பின்பற்றிதான் நானும் எனது ஆதரவாளர்களும் தர்ம யுத்தத்தை தொடங்கினோம்.


தற்போது சசிகலா குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க செல்ல கூடாது, கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செயல்பட்டு வருகிறோம். எங்கள் கோரிக்கைக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் 2 அணிகளும் இணைவதில் எந்தவித நிபந்தனையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து கோகிலாபுரம், ராயப்பன் பட்டி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

Similar News