செய்திகள்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

Published On 2018-09-01 12:03 GMT   |   Update On 2018-09-01 12:03 GMT
மஹிந்திரா மோஜோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். #motorcycle



மஹிந்திரா நிறுவனத்தின் மோஜோ மோட்டார்சைக்கிள் அக்டோபர் 2015-இல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

மஹிந்திராவின் ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதன் விற்பனை மந்தமாக முக்கிய காரணம் மஹிந்திரா நிர்ணயம் செய்த விலை தான் என்ற கருத்து பரவலாக இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மோஜோ UT 300 மாடலை மஹிந்திரா வெளியிட்டது.

புதிய மோஜோ மாடலும் விற்பனையில் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தராத நிலையில், மஹிந்திரா புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி மோஜோ மோட்டார்சைக்கிளின் எலெக்ட்ரிக் வெர்ஷனை வெளியிட உள்ளது. சமீபத்தில் மஹிந்திரா மோஜோ எலெக்ட்ரிக் மாடலின் ப்ரோடோடைப் பெங்களூரு அருகே சோதனை செய்யப்பட்டது.



வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் இல்லாத நிலையில், எலெக்ட்ரிக் வெர்ஷன் பார்க்க வழக்கமான மோஜோ போன்றே காட்சியளிக்கிறது. எனினும் கியர் லிவர் மற்றும் கூடுதலான பேனல்கள் இல்லாதது வித்தியாசமாக உள்ளது. இதில் உள்ள பெரிய ஸ்ப்ராக்கெட் மற்றும் பெல்ட் டிரைவ் போன்றவை வழக்கமான செயின் டிரைவுக்கு மாற்றாக அமைந்துள்ளது.

புதிய மோட்டார்சைக்கிளின் மோட்டார் மற்றும் பேட்டரி சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை. மஹிந்திரா மோஜோ XT 300 ஃபியூயல் இன்ஜெக்டெட் மோட்டார் 27 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 30 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. மோஜோ UT 300 மாடலின் கார்புரேட்டெட் இன்ஜின் 23.1 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 25.2 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

புகைப்படம் நன்றி: Cartoq
Tags:    

Similar News