இந்தியா

காவல் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: நீதி விசாரணைக்கு நவீன் பட்நாயக் வலியுறுத்தல்

Published On 2024-09-20 07:33 GMT   |   Update On 2024-09-20 08:10 GMT
  • காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி மீது தாக்குதல்.
  • மேலும் பெண்ணுக்கு எதிராக அதிகாரிகள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.

ஒடிசா மாநிலத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். இவரது கடையில் சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட, காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாக ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் இருவரையும் தாக்கியுள்ளனர். அதுவும் இல்லாமல் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். தன்னுடைய ஜாக்கெட், பிரா ஆகியவற்றை கழற்றிய பிறகு, ஆண் அதிகாரி ஒருவர் மார்பில் உதைத்ததாக பெண் குற்றம்சாட்டினார். மேலும், இன்ஸ்பெக்டர் தன்னுடைய ஆணுறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதி விசாரணை தேவை என ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நவீன் பட்நாயக் கூறியதாவது:-

கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி ஆகியோர் காவல் நிலையத்தில் நடந்ததை நாம் கேட்டிருப்போம். இருவரும் தாக்கப்பட்டது மற்றும் ராணுவ அதிகாரி வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக வெளியான குற்றச்சாட்டு மிகமிக அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒடிசா மாநிலத்தில் பாஜக-வின் திறமையின்மைமைய இந்த சம்பவம் காட்டுகிறது.

இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News