செய்திகள்

அக்டோபர் 4-இல் புதிய அறிவிப்பை வெளியிடும் ஹூன்டாய்

Published On 2018-07-28 10:38 GMT   |   Update On 2018-07-28 10:38 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய காரின் பெயர் அக்டோபர் 4-ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Hyundai #Santro


ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கார் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன்படி அக்டோபர் 4-ம் தேதி அந்நிறுவனத்தின் சிறிய ஹேட்ச்பேக் பெயர் அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் மாத இறுதியில் இந்த கார் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

ஹூன்டாய் நிறுவனம் தனது சான்ட்ரோ மாடலை புதுப்பொழிவுடன் மீண்டும் அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கார் சான்ட்ரோ என பெயரிடப்பட்டு கூடுதலாக முந்தைய மாடல்களை போன்றே சிங் என்ற வார்த்தை சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் அடுத்த மாத வாக்கில் ஹூன்டாய் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களிடம் புதிய காரின் பெயரை வழங்கலாம். இந்தியாவில் சான்ட்ரோ பிரான்டு அதிகம் பிரபலமான மாடலாக இருந்தது. 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அதிக பிரபலமாக இருந்த சான்ட்ரோ, பின்னர் ஹூன்டாய் i10 மாடல் அறிமுகமானதும் சான்ட்ரோ விற்பனை குறைந்தது.



இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஹூனடாய் சான்ட்ரோ மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய ஹேட்ச்பேக் இயான் மாடலுக்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது. புதிய காரின் கேபின் பல்வேறு அம்சங்களுடன் பிரீமியம் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. புதிய சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் BS-VI எமிஷன் மற்றும் AMT யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

உள்புறம் ஹூன்டாய் மாடலில் டூயல்-டோன் வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த உபகரணங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய காரில் வசதியான இருக்கைகள், கால் வைக்கும் வசதி மற்றும் ஹெட்ரூம் வழங்கப்படுகிறது. இதன் டாப்-என்ட் மாடலின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மல்டி-இன்ஃபர்மேஷன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட இருக்கிறது. #Hyundai #Santro 
Tags:    

Similar News