உள்ளூர் செய்திகள்

காடாம்புலியூரில் நடந்த வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முதல்வர், ஆணைய தலைவருக்கும் அனுப்ப வேண்டிய கடித பிரதிகளை பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் நிர்வாகிகளிடம் வழங்கியபோது எடுத்தபடம்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் -பா.ம.க. செயற்குழுவில் தீர்மானம்

Published On 2023-04-26 09:15 GMT   |   Update On 2023-04-26 10:09 GMT
  • கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் காடாம்புலியூரில் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ஜெயபால் வரவேற்றார்.
  • ஒவ்வொரு பா.ம.க.வினரும் குறைந்தது 10 நபர்களை சந்தித்து, கடிதம் அனுப்ப வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

கடலூர்:

கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் காடாம்புலியூரில் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ஜெயபால் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து, வைத்திலிங்கம், முருகவேல், வேங்கை சேகர், சக்திவேல், மாவட்டபொருளாளர் சத்திய ஜானகி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வன்னியர்க ளுக்கான உள் ஒதுக்கீட்டினை வரும் கல்வியாண்டிலே பெற பா.ம.க. வன்னியர் சங்கத்தினர் மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் கிராமம், நகரம் தோறும் பிரச்சாரம் மேற்கொள்வது எனவும், உள்ஒதுக்கீடு விவகாரத்தில் பிற அரசியல் கட்சிகள், பொது நல, தன்னார்வ, தொண்டு அமைப்புகளைச் சார்ந்த வன்னியர்கள், வன்னியர் அல்லாதவர்கள் இட ஒதுக்கீட்டின் பயன் அறிந்த பட்டியலினத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடமும் ஆதரவு கோரி தமிழக முதல்வர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கும் வலியுறுத்தும் கடிதத்தை அனுப்ப வலியுறுத்த வேண்டும் எனவும், கடலுார் பா.ம.க. வடக்கு மாவட்டத்தின் சார்பில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்புவது எனவும், வணிக நிறுவனங்களின் பெயர்களை துாய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும் எனவும், பா.ம.க.வின் இட ஒதுக்கீட்டின் கொள்கையால் வன்னியர் சமுதாயம் கல்வி, பொருளா தாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றால் அடையும் பயன்குறித்து, ஒவ்வொரு பா.ம.க.வினரும் குறைந்தது 10 நபர்களை சந்தித்து, கடிதம் அனுப்ப வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் எழிலரசன் நன்றி கூறினார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News