உள்ளூர் செய்திகள்

வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு.

காளியம்மனுக்கு 10 ஆயிரத்து 8 வளையல் அலங்காரம்

Published On 2022-08-10 09:24 GMT   |   Update On 2022-08-10 09:24 GMT
  • பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி வளையல்களை காணிக்கையாக வழங்கினர்.
  • 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு காளியம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வடக்கு பொய்கைநல்லூர் எல்லை ரோடு பகுதியில் நந்தவன காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்தே தினமும் அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி வளையல்களை காணிக்கையாக வழங்கினர்.

இதில் 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு காளியம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பஞ்சமுக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக 11 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News