உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை படத்தில் காணலாம்.

திட்டக்குடி அருகே வடபாதி ஏரிக்கரையில் 100 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

Published On 2023-09-22 09:19 GMT   |   Update On 2023-09-22 09:19 GMT
  • சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • தப்பியோடியவர் ‌ வடபாதி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பது போலீ சாருக்கு தெரியவந்தது.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுபாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடபாதி கிராமத்தில் உள்ள ஏரியில் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் அப்பகு திக்கு இன்று காலை விரைந்து சென்றனர். அப்போது ஏரிக்க ரையின் மீது அமர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடிக்க போலீசார் முயன்றனர்.

அருகில் இருந்த மோட்டார் சைக்கிளில் அவர் தப்பிவிட்டார். இதையடுத்து ஏரிக்கரையில் வைக்கப்பட்டிருந்த 500 பாக்கெட் கள்ளச்சாராயம், லாரி டியூபில் இருந்த சுமார் 100 லிட்டர் அளவு கொண்ட சாராயம் ஆகியவற்றை சிறுபாக்கம் போலீசார் கைப்பற்றினார். மேலும், தப்பியோ டியவர் வடபாதி கிராம த்தைச் சேர்ந்த ராயப்பி ள்ளை மகன் சரத்குமார் (வயது 30) என்பது போலீ சாருக்கு தெரியவந்தது. இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News