1000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின
- சுமார் 1000 ஏக்கர் சம்பா பயிர் விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது.
- ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்திருந்த நிலையில் குறுவை பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி, அன்னவாசநல்லூர், திருமாளம் பொய்கை, மலட்டேரி, திருப்பயத்தங்குடி உள்ளிட்ட 9 வருவாய் கிராமங்களுக்கான சுமார் 1000 ஏக்கர் சம்பா பயிர் விளை நிலங்களுக்கு மழை நீர் புகுந்தது.
மேலும் பில்லாளியில் உள்ள வடிகால் வாய்க்கால் கதவணை சரியில்லாததால் மழை நீர் வடியாமல் உள்ளது.
இதனால் சுமார் 1000 ஏக்கரில் நடவு செய்து 25 நாட்களே ஆன சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி வேர்கள் அழுகும் சூழந்லை ஏற்பட்டுள்ளது.
சுமார் ஏக்கருக்கு ரூ 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்திருந்த நிலையில் குறுவை பாதிக்கப்பட்டது.
இதில் இருந்து மீண்டு தற்போது சம்பா சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு மீண்டும் மழையால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே உடனடியாக தடுப்பணையை சரி செய்து கொடுத்தும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.