மயிலாடுதுறை பகுதி சிவன் கோவில்களில் 1008 சங்காபிஷேகம்
- புனிதநீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி:
கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருவெண்கா ட்டில் பிர்ம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யே ஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையான கோவிலாகும்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி 1008 சங்காபிஷகம் நடந்தது.
முன்னதாக புனிதநீர் நிரப்பபட்ட சங்குகள் நெல்லின் மீது பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ராமகிருஷ்ணன் குடும்பத்தி னர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், சீர்காழி திருநிலைநாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசாமி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை யொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.
முன்னதாக புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பி க்கப்பட்டது.
தொடர்ந்து, புனிதநீரால் மூலவர் பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், பொன்னா கவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையார் கோவில் மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசாமி கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தை யொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.
பின், மூலவருக்கு சங்காபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.