தூத்துக்குடியில் உலக மக்கள் நன்மை வேண்டி 1008 சிறப்பு திருவிளக்கு பூஜை
- பத்திரகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு 1008 சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பிரையண்ட் நகர் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காகவும், உலக மக்களை மிகவும் அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து மக்கள் முற்றிலுமாக விடுபட்டு ஆரோக்கியத் துடன் வாழ வேண்டியும், தொழில் வளம் பெறுகவும், நாட்டில் ஒற்றுமை ஓங்கவும், மழை வளம் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டியும், 1008 சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி பஜனை பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர்.
சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை தர்மகர்த்தா முத்து ராஜன் நாடார், செயலாளர் ஆறுமுக பாண்டி நாடார், பொருளாளர் ஐகோர்ட் துரை நாடார், கொடை விழா தலைவர் முருகேசன் நாடார் மற்றும் ஆலய நிர்வா கத்தினர் மற்றும் காமராஜர் நற்பணி இயக்கத்தினரால் சிறப்பாக செய்திருந்தனர்.
விளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள்,குங்குமம் அடங்கிய பிரசாத பை வழங்கபட்டது.