உள்ளூர் செய்திகள்

முத்தாரம்மன் கோவில் விழாவில் 1008 திருவிளக்கு பூஜை நடந்த காட்சி.

உடன்குடி கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் விழாவில் 1,008 திருவிளக்கு பூஜை

Published On 2023-11-26 08:47 GMT   |   Update On 2023-11-26 08:47 GMT
  • புதியதாக கட்டப்பட்ட முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 21-ந்தேதி மாலை பரிகார பூஜை நடந்தது.
  • தென் மாவட்டங்களில் நல்ல கனமழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜையும் நடந்தது.

உடன்குடி:

உடன்குடி யூனியன் கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றது. புதியதாக கட்டப்பட்ட இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவை யொட்டி கடந்த 21-ந்தேதி மாலை பரிகார பூஜை நடந்தது.

22-ந்தேதி காலை 5 மணிக்கு அனுக்ஞை, எஜமா னர் சங்கல்பம், தேவதா சங்கல்பம், விநாயகர் பூஜையை தொடர்ந்து

23-ந்தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு குரு ஹோரையில் முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்க ளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.

கடந்த 24-ந்தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 8.15 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம்புறப்பட்டு முத்தாரம்மன், பரிவார தெய்வங்களுக்கும், விமான கலசத்திற்கும் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்த ர்கள் கலந்து கொண்ட னர். தொடர்ந்து காலை 10 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு சஷர நாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலியும் நடந்தது.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு தென் மாவட்டங் களில் நல்ல கனமழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஏற்பாடு களை கோவில் திருப்பணி குழு தலைவரும், உடன்குடி யூனியன் முன்னாள் துணை தலைவருமான ராஜதுரை, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பட்டுராஜன், துணை செயலாளர் தங்க ராஜ், துணை பொருளாளர் சேர்மத்துரை மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்த னர்.

Tags:    

Similar News