ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.1.05 கோடி உண்டியல் காணிக்கை
- சலவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்
- 442 கிராம் தங்கம், 590 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் காணிக்கை எண்ணப்படும்.
இம்மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் விஜயலட்சுமி, தேக்கம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கோவல் கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, அறநிலையத்துறை ஆனைமலை பகுதி ஆய்வாளர் சித்ரா, மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்கா வலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, தங்க மணி, மருதமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், சலவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நிரந்தர உண்டியலில் 80 லட்சத்து 24 ஆயிரத்து 881 ரூபாயும், தட்டு காணிக்கை உண்டியலில் 25 லட்சத்து 15 ஆயிரத்து 485 ரூபாயும் இருந்தது. மேலும் 442 கிராம் தங்கம், 590 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.