உள்ளூர் செய்திகள்
நெல்லையில் நாளை 11 மையங்களில் நீட் தேர்வு
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
- அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பிளஸ் - 2 முடித்த பின்னர் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தேசிய தேர்வு முகமையால் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் பொது நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் 11 மையங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 1 மையத்திலும் நீட் தேர்வு நடக்கிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடைபெறும் இந்த தேர்வை ஏராளமான மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
இதனையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.