சிறுமலையில் காட்டு பன்றி வேட்டையாடிய 11 பேருக்கு அபராதம்
- சிறுமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
- காட்டுபன்றியை வேட்டையாடி இறைச்சியை கொண்டுவந்த 11 பேரை பிடித்தனர். மாவட்ட வனஅலுவலர் அறிவுறுத்தலின்பேரில் 11 பேருக்கும் ரூ.5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்- சிறுமலை சாலையில் வனசோதனை சாவடி அமைந்துள்ளது. இங்கு சம்பவத்தன்று வனக்காப்பாளர்கள் சங்கர், தனலட்சுமி ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது உதவி வனபாதுகாவலர் சீனிவாசன் தலைமையில் வாகன தணிக்கை நடை பெற்றது.
சிறுமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் சிறுமலை பழையூரில் தோட்ட மேற்பார்வையாளராக பணிபுரியும் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பெருமாள்(65), திண்டுக்கல் காந்தி கிராமத்தை சேர்ந்த ஜோதிபிரகாஷ்(32) ஆகியோர் வந்தனர்.
அவர்கள் கொண்டுவந்த பாத்திரங்களில் ஆய்வு செய்த போது காட்டுபன்றி இறைச்சி இருந்தது. இதனையடுத்து வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் பாண்டி, சரவணன், அப்துல்ரகு மான் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த தோட்ட த்திற்கு பெருமாளை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது காட்டுபன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட முத்து ராமலிங்கம், சக்திவேல், ரமேஷ், நாட்ராயன், முருகன், பாண்டி, ஜெய ப்பிரகாஷ், கோபிஆனந்த், குமரன் ஆகிய 11 பேரை பிடித்தனர். மாவட்ட வனஅலுவலர் ராஜ்குமார் அறிவுறு த்தலின்பேரில் 11 பேருக்கும் ரூ.5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.