கடலூர் மாவட்டத்தில் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.114 கோடி நகைக்கடன் தள்ளுபடி: கலெக்டர் தகவல்
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
தமிழக முதல்-அமைச்சர் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகைக்கடன் தள்ளுபடி ஒரு குடும்பத்திற்கு 5 பவுன் மற்றும் அதற்கு கீழுள்ள நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன் படிகடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதன் கிளைகள் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளிட்ட 181 கூட்டுறவு நிறுவனங்களில் அரசு வழிகாட்டுதலின்படி துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய முறையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்பட்டன.இத்திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டத்தில் 29,172 பயனாளிகளுக்கு ரூ.114.25 கோடி மதிப்பீட்டிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.