சென்றாய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் மீட்பு
- கடந்த 5.4.2023 ஆம் தினத்தன்று பொதுமக்கள் முன்னிலையில் இந்து சமய அறநிலை யத்துறையினரால் பொது ஏலம் விடப்பட்டது.
- ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் ஏலம் எடுத்தவரிடம் இந்து சமய அறநிலையத் துறையினர் சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை ஒப்படைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பி.கோடுபட்டி பகுதியில் சென்றாயசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 70 வருடமாக ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தை அறநிலைத்துறை யினர் ஏலம் விட நோட்டீஸ் அனுப்பியதை வாங்க மறுத்த ஆக்கிரமிப்பு காரர்களிடம் இருந்து சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நிலத்தின் மேல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இந்து சமய அறநிலைத்துறைக்கு நிலம் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு செய்து வந்தவர்களுக்கு மூன்று முறை காலக்கெடு கொடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 5.4.2023 ஆம் தினத்தன்று பொதுமக்கள் முன்னிலையில் இந்து சமய அறநிலை யத்துறையினரால் பொது ஏலம் விடப்பட்டது.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் 5 வருடத்திற்கு 15 லட்சத்து 20 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி முதல் ஏலம் எடுத்தவர்களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.
இந்த நிலையில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தை விட்டு வெளியேறாமல் விவசாய நிலத்தில் கடலைக்காய், மஞ்சள் கால்நடைகளுக்கு தீவனபயிர் வாழைமரம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டுள்ளனர்.
மேலும் நேற்று இந்து சமய அறநிலையத் துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மருத்து வத்துறையினர் வருவாய் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி எந்திரம் உழவு டிராக்டர் கொண்டு நிலத்தில் உள்ள பயிர்களை அழித்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் ஏலம் எடுத்தவரிடம் இந்து சமய அறநிலையத் துறையினர் சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை ஒப்படைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.