உள்ளூர் செய்திகள்

காவலர் தங்கும் இல்லம்’ கட்டுமானத்திற்காக திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

முத்துப்பேட்டையில் ரூ.12 கோடி மதிப்பில் காவலர் தங்கும் இல்லம்

Published On 2023-11-11 08:56 GMT   |   Update On 2023-11-11 08:56 GMT
  • சட்ட ஒழுங்கு பிரச்சனையால் தூரத்திலிருந்து போலீஸ்காரர்கள் அழைத்து வரபடுகிறார்கள்.
  • ‘காவலர் தங்கும் இல்லம்’ கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் போதுதொலை தூரத்திலிருந்து போலீஸ்காரர்கள் அழைத்து வரபடுகிறார்கள்.

அப்படியே அழைத்து வரும் பட்சத்தில் இப்பகுதியில் தங்க வைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.

அதனால் முத்துப்பேட்டை பகுதியில் காவலர்கள் தங்குமிடம் அமைக்க உயர் காவல் அதிகாரிகள் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரையித்தனர்.

இதனை ஏற்றுக்கொ ண்ட தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் சென்ற சட்டமன்ற கூட்டத்தில் முத்துப்பே ட்டையில் ரூ.12கோடியில் காவலர்கள் தங்குமிடம் கட்ட அறிவித்தார்.

அதன்படி முத்துப்பேட்டையில் இடம் தேர்வு பணிகள் நடந்து வந்தநிலையில் கடந்த ஆண்டு கோவிலூர் கிழக்கு கடற்கரையில் உள்ள கடலோர காவல் படை காவல் நிலையம் எதிரே இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்தநிலையில் 'காவலர் தங்கும் இல்லம்' கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதற்கு திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை வகித்து கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டிதுவக்கி வைத்தார்.

இதில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கட்டிட பொறியாளர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News