கோவை மாநகரில் ஒரே நாளில் 12 மோட்டார் சைக்கிள்- மொபட்டுகள் திருட்டு
- அந்த மொபட்டில் சலிவன் வீதிக்கு சென்று அங்கு மொபட்டை நிறுத்தினார்.
- வாகனங்களின் உரிமையாளர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.
கோவை:
மதுரையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). இவர் கோவை இடையர் வீதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செ்யது வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவிற்கு மதுரை சென்றார். அதனால் அவர் தனது மொபட்டை உறவினரிடம் கொடுத்து இருந்தார். அவர் அந்த மொபட்டில் சலிவன் வீதிக்கு சென்று அங்கு மொபட்டை நிறுத்தினார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த மொபட் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் கோவை வந்து மொபட் திருட்டு போனது குறித்து வெரைட்டிஹால் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன மொபட்டை தேடி வருகின்றனர்.
இதே போன்று கோவை ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, செல்வபுரம், போத்தனூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்பட பகுதிகளில் மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு போனது.
இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன வாகனங்களை திருடி சென்றவர்கள் யார் ? வாகனங்கள் எங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
கோவை மாநகரில் நேற்று மட்டும் ஒரே நாளில் 12 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.