பாவூர்சத்திரத்தில் போதகர் ஒட்டி வந்த கார் மோதி 12 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
- வில்சன் சாலமன் தனது காரில் தென்காசி சென்று விட்டு மீண்டும் அடைக்க லபட்டணம் வருவதற்காக நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.
- அப்போது சாலை ஓரங்களில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப் பட்டணம் கிராமத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக இருந்து வருபவர் வில்சன் சாலமன் (வயது 58).
கார் மோதி விபத்து
இவர் தனது காரில் தென்காசி சென்று விட்டு மீண்டும் அடைக்க லபட்டணம் வருவதற்காக பாவூர்சத்திரம் நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரங்களில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.
12 மோட்டார்கள் சேதம்
இதில் 12 மோட்டார் சைக்கிள்கள் சேத மடைந்தன. வில்சன் சாலமன் ஒட்டி வந்த காரும் பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி வில்சன் சாலமன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரங்களில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.