உள்ளூர் செய்திகள்

கோவை புறநகரில் கஞ்சா விற்பனை- பெண் உள்பட 12 பேர் கைது

Published On 2022-08-05 09:47 GMT   |   Update On 2022-08-05 09:47 GMT
  • ரெயில்வே பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
  • 12 பேரையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

கோவை:

கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் நரசிம்ம நாயக்கன் பாளையம் ரெயில்வே பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போலீசார் 1 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள், ரூ.350 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராக்கி பாளையத்தை சேர்ந்த எலக்ட்ரிசீயன் சரவணன் (வயது 20), தொப்பம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

தொண்டாமுத்தூர் வாலாங்குட்டை கருப்பராயன் கோவில் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பைசுல் இஸ்லாம் (30), சபீக் இஸ்லாம் (46) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.

கே.ஜி.சாவடி போலீசார் மாலா கோவில் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர். கோவில்பாளையம் போலீசார் கோட்டை பாளையம் மின் மயானம் அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற அவினாசியை சேர்ந்த கார்த்திகேயன் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.

ஆனைமலை போலீசார் கெட்டிமேலன்புதூர் பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற காளியாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (42), அம்பராம்பாளையத்தை சேர்ந்த அருண்வேல் (53) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் தண்ணீர் தொட்டி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் கஞ்சாவை விற்பனை செய்து கொண்டு இருந்த சாந்ராமணி (45), அபுசேட் (24), முகமது ரபீக் (18) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சவை பறிமுதல் செய்தனர்.

குதிரைபாளையம் பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த புளியம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (23) என்வரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News