உள்ளூர் செய்திகள்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வீதி உலா வந்த காட்சி.

விருத்தாசலம் மணிமுத்தாற்றில் 12 ஆயிரம் செம்பொன் இடும் நிகழ்ச்சிதிரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-07-02 06:58 GMT   |   Update On 2023-07-02 06:58 GMT
  • 12 ஆயிரம் செம்பொன்னை பெறுதல் நிகழ்ச்சி நடந்தது.
  • 108 திருக்கையிலாய வாத்தியங்களுடன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.

கடலூர்:

நடு நாட்டு சிவதலங்களில் 2-வது தலமான காசியை விட வீசம் அதிகம் என போற்றப்படும் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தில் சைவத்தின் முதல் தொண்டர் தம்பிரான் தோழர் நம்பி ஆரூரார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதுகுன்றத்து முழு முதல் பழமலைநாதர் பெருமானிடம் 12000 பொற்காசுகள் பெற்று மணிமுத்தா நதியில் விடும் தொன்மையான பெருவிழா கொடியேற்ற துடன் தொடங்கியது.

இதையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு 21 திருமஞ்சனம் அலங்கா ரம் மகேஸ்வர பூஜை, முதுகுன்றத்தில் இமையோர் தனி நாயகரிடம் ஏழு இசை இன் தமிழால் பதிகம் பாடி 12 ஆயிரம் செம்பொன்னை பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பெருமானிடம் பெற்ற செம்பொன்னை மணிமுத்தா நதியில் இட 108 திருக்கையிலாய வாத்தியங்களுடன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் மணிமுத்தா நதியில் உள்ள மாற்று உரைத்த விநாயகர் துணையோடு செம்பொ ன்னை மணிமுத்தா நதியில் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News