உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் 129 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published On 2022-06-27 07:53 GMT   |   Update On 2022-06-27 07:53 GMT
  • திண்டுக்கல் மாநகராட்சி சிறப்பு கூட்டம் இன்று மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது.
  • 129 தீர்மானங்கள் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின்பு நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சி சிறப்பு கூட்டம் இன்று மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ராஜப்பா, கமிஷனர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் இதில் பெரும்பாலான தி.மு.க. உறுப்பினர்கள் வராததால் மன்றம் வெறிச்சோடி காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு உறுப்பினராக வரத் தொடங்கினர்.

104 பொது தீர்மானம் மற்றும் 15 சிறப்பு தீர்மானங்கள் என மொத்தம் 129 தீர்மானங்கள் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின்பு நிறைவேற்றப்பட்டது.

ஜூலை 1ந் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாரம் ஒரு முறை சுகாதாரத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள்.

பிளாஸ்டிக் இல்லாத மாநகராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News