கோவில்பட்டியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 133 திருக்குறள் அதிகாரத்திற்கு 133 யோகா ஆசனங்கள்
- விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
- கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மாணவியை பாராட்டி பொன்னாடை போத்தி பரிசு வழங்கினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம், மைக்ரோ பாயிண்ட் கல்வி மையம், அருணாச்சலம் ஆன்மீக அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிறார்கள் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், உலகயோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
133 ஆசனங்கள்
இதில் 9 வயது சிறுமி ரவீனா, 133 திருக்குறள் அதிகாரங்களை கூற 133 ஆசனங்களைச் செய்து அசத்தி னார். நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா கழக நிறுவனர் சுரேஷ் குமார் வரவேற்றார்.
அருணாச்சல ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மைக்ரோ பாயிண்ட் கல்வி மைய நிறுவனர் ஆம்ஸ்ட்ராங், வக்கீல் கருப்பசாமி, தொழிலதிபர் நடராஜன், முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
பரிசு வழங்கல்
விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மாணவியை பாராட்டி பொன்னாடை போத்தி பரிசு வழங்கினார்.
சிறப்பு அழைப்பா ளர்களாக ரம்யா விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக விடிவெள்ளி அறக்கட்டளை நிறுவனர் ஷீலா ஜாஸ்மின் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் தொழிலதிபர் ராமராஜ் நன்றி கூறினார்.