ஜன் சேவா புரஸ்கரா விருது பெற்று தருவதாக கூறி ரூ.14¾ லட்சம் மோசடி
- டாக்டர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 12 பேரிடம் ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை பெற்று கொடுத்தேன்.
- தொழில் அதிபர்கள் உள்பட 12 பேரிடம் ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை பெற்று இக்னீசியஸ் பிரபுவிடம் கொடுத்தேன்.
குனியமுத்தூர்:
மதுரை தாசில்தார் நகரை சேர்ந்தவர் சலீம் ராஜா (வயது 61). வக்கீல்.
இவர் கோவை குனியமுத்தூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த 2021-ம் ஆண்டு இணையதளம் மூலமாக கோவை புதூரை சேர்ந்த இக்னீசியஸ் பிரபு (40) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னிடம் மத்திய அரசில் தனது தெரிந்தவர்கள் உள்ளதாக கூறினார்.
மேலும் டாக்டர்கள், தொழில் அதிபர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு ஜன் சேவா புரஸ்கர விருது ஜனாதிபதி, மற்றும் பிரதமரிடம் பெற்று தருவதாக கூறினார். அதற்கு பணம் மட்டும் செலவாகும் என கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் டாக்டர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 12 பேரிடம் ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை பெற்று இக்னீசியஸ் பிரபுவிடம் கொடுத்தேன். ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அவர் கூறியபடி விருது பெற்று கொடுக்கவில்லை.
என்னிடம் பணம் கொடுத்தவர்கள் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். எனவே என்னிடம் பணத்தை பெற்று மோசடி செய்த இக்னீசியஸ் பிரபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருந்து விருது வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்த இக்னீசியஸ் பிரபுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.