உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் முதல் நாளில் 145 மனுக்கள் பெறப்பட்டது

Published On 2023-05-17 08:22 GMT   |   Update On 2023-05-17 08:22 GMT
  • மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை கலெக்டர் நாணயம் பங்கேற்று மனுக்கள் பெற்றார்.
  • முதல் நாள் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குட்பட்ட மீரான்குளம் உட்பட்ட கிராமமக்களிடம் பட்டாமாறுதல், முதியோர் உதவிதொகை கேட்டு 145 மனுக்கள் பெறப்பட்டன.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை கலெக்டர் நாணயம் பங்கேற்று மனுக்கள் பெற்றார்.

முதல் நாள் ஸ்ரீவெங் கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குட்பட்ட மீரான்குளம், 1, 2 கிராமம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், கட்டாரிமங்கலம், பழங்குளம் கிராமமக்களிடம் பட்டாமாறுதல், முதியோர் உதவிதொகை கேட்டு 145 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் தாசில்தார் ரதிகலா, தங்கையா, கலெக்டர் அலுவலக மேலாளர் இளங்கோ, அலுவலர்கள் ஜவகர்லால், ஜெயச்சந்திரன், பழனி வேலாயுதம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலாதேவி, மாசானமுத்து உள்ளிட்ட வர்கள் பங்கேற்ற னர்.

2-ம் நாளான இன்று ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறுவட்டம் பிடானேரி, எழுவரைமுக்கி கிராமம், சாத்தான்குளம் குறு வட்டம் பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டி யிருப்பு, புதுக்குளம், ஆகிய கிராமத்துக்கும், நாளை (18-ந்தேதி) நெடுங்குளம், கோமானேரி, கொம்பன்குளம், தச்சமொழி ஆகிய கிராம மக்களுக்கும், பள்ளக்குறிச்சி குறு வட்டத்துக்குள்பட்ட முதலூர், பள்ளக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் ஆகிய கிராமத்துக்கும், 19-ந்தேதி கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, அரசூர் பகுதி 1, 2, திருப்பணி புத்தன்தருவை, படுக்கப்பத்து ஆகிய கிராம மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்படுகிறது.

Tags:    

Similar News