மாவட்டத்தில் 147 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
- சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
- ஊர்வலமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மாவட்ட விநாயகர் கமிட்டி தலைவருமான சரண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் , சீர்காழி, மங்கை மடம், பூம்புகார், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு ஆகிய இடங்களில் 147 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு மறுநாள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மறுநாள் பழைய பஸ் நிலையத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றி ணைக்க ப்பட்டு பின்னர் ஊர்வ லமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தில் அனைத்து பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.