உள்ளூர் செய்திகள்

பழனி முருகன் கோவிலில் எடப்பாடி பக்தர்கள் குழு சார்பில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தொடங்கியது

Published On 2023-02-10 03:11 GMT   |   Update On 2023-02-10 03:11 GMT
  • தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
  • பஞ்சாமிர்த குழுவினர் நேற்று பழனி வந்தனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பழனி:

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். காங்கேயம், தாராபுரம், மானூர் வழியாக வரும் அவர்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பழனி சண்முகநதி வந்தடைகின்றனர். அங்கு காலை மகாபூஜை நடத்திவிட்டு காவடிகளுடன் புறப்பட்டு பழனி முருகன் கோவில் வருகின்றனர். பழனிக்கு வரும் இவர்களுக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும்.

இந்நிலையில் பஞ்சாமிர்த குழுவினர் நேற்று பழனி வந்தனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரீச்சம் பழம், 1 டன் கற்கண்டு, 200 கிலோ தேன், 200 கிலோ நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

Tags:    

Similar News