உள்ளூர் செய்திகள்

கோவையில் 1508 திருவிளக்கு பூஜை விழா

Published On 2023-04-16 09:01 GMT   |   Update On 2023-04-16 09:01 GMT
  • விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
  • கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் எதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கவுண்டம்பாளையம்,

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள எண்.4.வீரபாண்டி பேரூராட்சி மற்றும் கூட லூர் கவுண்டம்பாளையம் நகராட்சி இந்து முன்னணி நடத்தும் 2-ம் ஆண்டு மாபெரும் 1508 திருவிளக்கு பூஜை விழா வீரபாண்டி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.

விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த விழாவில் முதலாவதாக சிலம்பாட்ட நிகழ்ச்சி, ஒயிலாட்டம் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் எதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிளக்கு பூஜையை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதனை ஸ்ரீ வாராஹி மந்திராலயத்தை சேர்ந்த மணிகண்ட சுவாமிகள் மற்றும் சிவ நாசர் இந்த பூஜையை நடத்தி வைத்தார்.

இந்த பூஜையில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விளக்கு, பூக்கள், எண்ணை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சிப்பு, வெற்றிலை மற்றும் பாக்குகளை விழா குழுவினர் வழங்கினர்.

இதனையடுத்து அனைத்து பக்தர்களும் விநாயகருக்கு பூஜை செய்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அதன்பிறகு ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன.இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் வீரபாண்டி, கூடலூர் கவுண்டம்பாளையம், நாயக்கனூர், சாமநாயக்கன்பாளையம், காளிபாளையம், திரு மலைநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News