உள்ளூர் செய்திகள்

தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் காந்திகிராம் கிராமப்புற நிறுவன பதிவாளர் சிவக்குமார் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய காட்சி.

நெல்லை தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் 159 மாணவ- மாணவிகளுக்கு பட்டம்

Published On 2022-11-02 08:58 GMT   |   Update On 2022-11-02 08:58 GMT
  • நெல்லை தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் 6-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
  • விழாவில் 59 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் 6-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக காந்திகிராம் கிராமப்புற நிறுவன பதிவாளர் சிவக்குமார் பங்கேற்று 159 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் படித்து பட்டங்களை பெற்று விடுவதுடன் வாழ்க்கையில் அனைத்தையும் அடைந்து விட முடியாது. தன்னம்பிக்கையோடு தொடர்ந்து புதிய செய்திகளை கற்று அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும். கல்வி என்பது பல முனைகளில் உங்களை உயர்த்தும். ஒழுக்கத்துடன் கூடிய நல்லெண்ணம் மேம்பட்டால் எல்லாம் மேம்படும் என்பதை உணர்ந்து வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள் என மாணவ- மாணவிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் முதல் மற்றும் 2-ம் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு பதக்கத்துடன் கூடிய பட்டங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் செந்தில்குமார் பால்ராஜ், முதல்வர் ரவீந்திரன், அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News