உள்ளூர் செய்திகள்

சுதந்திர தினத்தன்று கோவையில் விடுமுறை அளிக்காத 174 நிறுவனங்களுக்கு அபராதம்

Published On 2023-08-16 09:44 GMT   |   Update On 2023-08-16 09:44 GMT
  • 227 நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
  • விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது

கோவை,

சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவுப்படியும், கோவை தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி அறிவுறுத்தல்படியும், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி வழிகாட்டுதலின் படி, தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) தலைமையில், சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது திடீர் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டது.

தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு உள்ளதா? அன்றைய தினத்தில் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கபட்டு இருந்தால் உரிய படிவம் வழங்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு நடைபெற்றது.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட 227 நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல், சம்பந்த ப்பட்ட ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன்ன றிவிப்பு அளிக்காமல், அன்றைய தினம் பணிபுரிய அனுமதித்த 78 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 96 உணவு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 174 உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அந்த நிறுவனங்களுக்கு ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த நிறுவனங்களில் அடுத்தமாதம் ஆய்வு செய்யப்பட்டு உரிய மாற்று விடுப்போ அல்லது இரட்டிப்பு ஊதியமோ வழங்கப்பட்டு உள்ளதா? என்று மீண்டும் ஆய்வு செய்யப்படும். மீண்டும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், சட்ட ப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News