உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட டிரைவர் சந்தோஷ்குமாரையும், பறிமுதல் செய்த லாரியையும் படத்தில் காணலாம்.

புளியரை சோதனை சாவடியில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2023-01-22 07:27 GMT   |   Update On 2023-01-22 07:27 GMT
  • தமிழகத்தில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி வருகிறார்கள்.
  • விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவிற்கு சென்று வருகிறது.

ரேஷன் அரிசி கடத்தல்

அத்தியாவசிய பொருட்களும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையே சட்ட விரோதமாக தமிழகத்தில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி வருகிறார்கள். இதனை தடுக்க போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் இன்று புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் 18 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

கைது

உடனடியாக லாரியை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கேரள மாநிலம் கொல்லோடு தாலுகா பனையங்கோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 44) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இந்த ரேஷன் அரிசியை கடத்தி செல்ல இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை கைது செய்த போலீசார் 18 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்த னர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டை களை குடிமைபொருள் வழங்கல் அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News