உள்ளூர் செய்திகள்

ஆத்தூர், சாயர்புரம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-12-20 08:09 GMT   |   Update On 2022-12-20 08:09 GMT
  • தூத்துக்குடிமாவட்டம் முழுவதும் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வனராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தனிப்படையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆத்தூர் பகுதியில் தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி சென்றார். மற்றொறுவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர் அதில், அவர் ஆத்தூர் புல்லாவெளியை சேர்ந்த அய்யப்பன் (வயது21) என்பதும், தப்பி ஓடியவர் அதேபகுதியை சேர்ந்த அதிபன் (25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் 2 செல்போன்கள், 64 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சாயர்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூட்டாம்புளியை சேர்ந்த வனராஜ் (21) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News