உள்ளூர் செய்திகள்

சர்வதேச மாநாட்டில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

பாளை சாரதா மகளிர் கல்லூரியில் 2 நாள் மாநாடு

Published On 2023-03-11 08:48 GMT   |   Update On 2023-03-11 08:48 GMT
  • ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி-பாளை சாரதா மகளிர் கல்லூரி இணைந்து 2 நாட்கள் சர்வதேச மாநாடு நடத்தினர்.
  • 26 கல்லூரிகளில் இருந்து 498 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை:

பாளை சாரதா மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை இணைந்து 2 நாட்கள் சர்வதேச மாநாடு நடத்தினர். முதல் நாள் நிகழ்ச்சி சாரதா மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் தொடங்கியது. ஆங்கிலத்துறை தலைவர் ரேணுகா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.

கல்லூரிமுதல்வர் கமலா, ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜாஸ்மின் ஆண்ட்ரூஸ் கவுரவ உரையாற்றினர். பேராசிரியர் பிரபாகர் மாநாட்டின் தலைப்பான "நாடு கடந்த இலக்கியத் தன்மை" பற்றி சிறப்புரையாற்றினார். மேலும் அரசியல் அமைப்புகளை நாம் கடந்து செல்ல வேண்டும் என்று கூறினார். இதில் 26 கல்லூரிகளில் இருந்து 498 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை பேராசிரியர் அழகிய நாயகி நன்றி கூறினார்.

2-வது நாள் நிகழச்சியில் சிறப்பு விருந்தினரான பேராசிரியர் டெரிபுல்லர் "சமகால இலக்கியத்தில் உலகளாவிய புலம்பெயர்ந்தோர் பற்றிய பிரதிபலிப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் சவுஜீனியா தர்ம சங்கரன் (ஓய்வு) சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் ரேணுகா நன்றி கூறினார்.

Tags:    

Similar News