உள்ளூர் செய்திகள் (District)

மேட்டுப்பாளையம் அருகே கோவிலின் கம்பி வேலிகளை சேதப்படுத்திய 2 யானைகள்

Published On 2023-03-21 09:58 GMT   |   Update On 2023-03-21 09:58 GMT
  • அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லை.
  • வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்,

தமிழகத்தில் கோடை காலம் தற்போது தொடங்கி உள்ளது.இதனால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை, காட்டுமாடு,மான் உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் வசித்து வருகின்றன.இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

மேலும் தற்போது வனப்பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி இன்று அதிகாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் இரு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லை.

மேட்டுப்பாளையம் - வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையைத் தாண்டி ஒரு புறம் இருந்து மறுபுறம் சாலையை கடக்க யானைகள் முயற்சித்தன. அப்போது இடையில் இருந்த அண்ணமார் கோவிலின் பாதுகாப்பு கம்பி வேலிகளை உடைத்து யானைகள் நாசம் செய்துள்ளன.இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மனித - வன உயிரின மோதல் ஏற்படுவதற்கு முன்னர் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வனவிலங்குகள் வனத்தை விட்டு ஊருக்குள் நுழையாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமயபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News