உள்ளூர் செய்திகள்

பஸ் பழுதானதால் சாலையில் காத்திருந்த மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.


ஆலங்குளம் அருகே நடுவழியில் அடுத்தடுத்து பழுதான 2 அரசு பஸ்கள் - மாணவ- மாணவிகள் அவதி

Published On 2022-11-26 08:18 GMT   |   Update On 2022-11-26 08:18 GMT
  • நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது.
  • பஸ் நேற்று தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எப்.சி. காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து விளக்கு அருகே நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது. அதேபோல் ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி சென்ற மற்றொரு அரசு பஸ்சும் பழுதாகி அடுத்தடுத்து நின்றது.

இதனால் அதில் இருந்த பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் சாலையோரம் காத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவ்வழியே வந்த மாற்று பஸ்களில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அங்கிருந்த பயணிகள் கூறியதாவது:-

ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரம் சென்ற பஸ் நேற்று தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எப்.சி. காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்குள் பழுது ஏற்பட்டு ஓடியதால் அதில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

பயணிகள் கோரிக்கை

நெல்லை- தென்காசி சாலையில் பழுதான பஸ்கள் அதிகளவில் இயங்கி வருகிறது. அதில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சரிவர செல்ல முடியாமல் போகும் சூழ்நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News