மாடு குத்தி தூக்கியதில் 2 பேர் காயம்
- கிராம மக்கள் ஒன்று கூடி நடத்திய மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
- பெருமாள் (வயது 40) என்பவருக்கு பலத்த காயமும் மற்றொருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
தொப்பூர்,
தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து கிராம பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு உள்ளவை பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
அதே போல் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நாகாவதி அணை அருகே உள்ள எர்ரப்பட்டி பகுதியில் நேற்று கிராம மக்கள் ஒன்று கூடி நடத்திய மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி பொதுமக்கள் ஆரவாரத்துடன் நடைபெற்று கொண்டிருந்த பொழுது அங்கு போதை ஆசாமிகள் ஒரு சிலர் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திரும்பிய மாடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இருவரை முட்டி குத்தி தூக்கியதில் சவுளூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 40) என்பவருக்கு பலத்த காயமும் மற்றொருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
இதில் காயமடைந்த இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.